கணினி பிரிவு மாணவர்களுக்கு இலவச கல்வி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 01, 2021

Comments:0

கணினி பிரிவு மாணவர்களுக்கு இலவச கல்வி?

கணினி பிரிவு மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் – ஆசிரியர் சங்க கோரிக்கை!!! கணினி பிரிவு மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். கணினி கல்வி திட்டம்:
தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்வித்திட்டம் என்ற புதிய திட்டத்தின் ஒப்பந்தத்தை 1999ம் ஆண்டு துவங்கியது. தனியார் நிறுவனங்கள் கணினி ஆய்வகத்திற்குரிய உபகரணங்கள், அவற்றிற்க்கான பராமரிப்பு, கணினி ஆசிரியர் சம்பளம் ஆகியவற்றிற்காக கணினி நிறுவனங்கள் மாணவர்களிடம் தலா ரூ.200 வசூல் செய்யப்படும். வசூலிக்கப்படும் தொகையானது கணினி கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்
ஒப்பந்தம்:
1999 ம் ஆண்டு தொடங்கப்பட்ட கணினி கல்வி ஒப்பந்தம் 2005ம் ஆண்டு முடிவடைந்தது. பழைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் அதற்கான ஆய்வக உபகரணங்களை அப்போதைய கணினி பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் 1880 பள்ளிகளுக்கு அரசு வழங்கியது. புதிய ஒப்பந்தத்திற்கு 2,657 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு மேல் ஆனதால் கணினி ஆய்வகம் ஒரு பள்ளியில் கூட செயல்படாத நிலையில் உள்ளது. கோரிக்கை:
இதனால் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் சங்கரமஹாலிங்கம் அவர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, தரம் உயர்த்தப்பட்ட புதிய பள்ளிகளில் கணினி ஆய்வகம் இலலாத நிலையில் மாணவர்கள் செய்முறை பயிற்சி இன்றி கணினி கல்வியை தொடரும் நிலையை நிலை உள்ளது.
ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிந்ததால் போட்டித் தேர்வு ரத்து
இதனால் அரசிடம் புதிய ஆய்வகத்தை உருவாக்கித்தர முறையிட்டோம். மேலும், கணினி கல்வி மாணவர்களுக்கு கட்டணத்தை ரத்து செய்து இலவச கல்வி கட்டணத்தை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews