அரசுப் பள்ளிகளில் இணைய வசதி குறித்து தகவல் கேட்கும் தேர்தல் ஆணையம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 06, 2021

Comments:0

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி குறித்து தகவல் கேட்கும் தேர்தல் ஆணையம்

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி அமைய உள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள கணினி, இணைய வசதிகள் குறித்துத் தேர்தல் ஆணையம், பள்ளிக்கல்வித் துறையிடம் தகவல் கோரியுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.6-ந் தேதியன்று நடை பெற உள்ளது
முதுநிலை ஆசிரியர் நியமன விவகாரத்தில் தேர்வு வாரியம் அலட்சியம் காட்டுவது ஏன்?
இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்காகக் கூடுதலாக வெப் கேமிரா, மடிக்கணினி மூலம் இணைய வசதியுடன் நேரிடையாக கண்காணிக்கப்பட உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக கணினி, மடிக்கணினி, இணையம் அந்தந்த தொகுதிகளுக்குத் தேவைப்படுகிறது. அதனையடுத்து, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பள்ளிகளில் கணினி, மடிக்கணினி வசதிகள் குறித்தும், பள்ளிகளில் இணைய வசதி குறித்தும் உண்டு, இல்லை என்ற ரீதியில் தகவல் கோரியுள்ளது. அதைத் தொடர்ந்து சனிக்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள கணினி, இணைய வசதிகள் இருப்பதும், இல்லாமலிருக்கும் தகவல்களை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கூகுள் ஷீட்டில் பதிவேற்றம் செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
CBSE தேர்வுகளில் மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு
இதிலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருப்பு உள்ள மடிக்கணினி இணையம் போக மீதம் உள்ள தேவைப்படும் பகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் தனியே மேற்கண்ட வசதிகளை பெற திட்டமிடுவதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews