அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கரோனா - 10 ம் வகுப்புக்கு திங்கள் வரை விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 18, 2021

Comments:0

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கரோனா - 10 ம் வகுப்புக்கு திங்கள் வரை விடுமுறை

விழுப்புரம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் 3,500-க்கும்மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கரோனா பரவல்காரணமாக தற்போது 9,10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறுகின் றன. இந்த வகுப்புகளில் 1,850 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மீண்டும் லாக்டவுன்? – ஹின்ட் கொடுத்த ராதாகிருஷ்ணன்!
இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றி வரும் 10-ம் வகுப்புஆசிரியர் ஒருவருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட் டதையொட்டி, மாணவிகள் மற்றும்சக ஆசிரியர்கள் அச்சமடைந் துள்ளனர். இதுகுறித்து அறிந்த சுகாதாரத் துறையினர் நேற்று பள்ளிக்குச் சென்று, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோ தனை மேற்கொண்டனர். முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியர் வகுப்பெடுத்த வகுப்பில் உள்ள 80 மாணவிகளுக்கு வருகின்ற திங்கட்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு வரும் அனைத்து மாணவி களுக்கும் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வறிக்கை சமர்ப்பிக்க - பிஎச்டி மாணவர்களுக்கு டிச. 31 வரை அவகாசம் : பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலாவிடம் கேட்டபோது, “தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது பணிக்கு வந்து செல்லும் ஆசிரியர்கள் உட்பட 74 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews