தமிழகத்தில் உள்ள வங்கிகளில் இந்த மாதம் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏடிஎம்.,களில் பணப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறையில் 531 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு: ஏப்ரல் 4ம் தேதி விண்ணப்பிக்கலாம்: TNPSC அறிவிப்பு
வங்கிகள் விடுமுறை:
கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் ஏ.டி.எம்.,களில் பணப்பரிவர்த்தனை முற்றிலும் தடைபட்ட நிலை இருந்தது. கொரோனா அச்சத்தில் இருந்து மீண்டு மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நேரத்தில் தற்போது மீண்டும் நோய்த்தொற்றின் இராண்டாம் அலை பரவி வருகிறது. பொதுவாக ஜனவரி மாதத்தில் வங்கிகளில் பண்டிகை காரணமாக அதிக விடுமுறைகள் இருக்கும். அதன் பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விடுமுறை நாட்கள் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விடுமுறை நாட்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் மார்ச் மாதம் 11 ஆம் தேதி மகா சிவராத்திரி விடுமுறை, அதனை தொடர்ந்து 13 மற்றும் 14 தேதிகளில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை.
10 % ஒதுக்கீடு வழங்கி குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? - அண்ணா பல்கலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
பின்னர் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் ஏ.டி.எம்.,களில் பணிவர்த்தனைகள் பாதிக்கப்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே ஏ.டி.எம்.,களில் 500 ரூபாய் தாள் மட்டுமே வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில் வங்கிகள் விடுமுறை என்பதால் மக்கள் வங்கி வேலைகளை விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.