ஆதி திராவிடா் நல விடுதிகளில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க பிப்.18 கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 16, 2021

Comments:0

ஆதி திராவிடா் நல விடுதிகளில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க பிப்.18 கடைசி

ஆதி திராவிடா் நல விடுதிகளில் சோ்வதற்கு தகுதியான பள்ளி மாணவா்கள், பிப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசனை!

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் 26 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் சேர விரும்பும் எஸ்சி, எஸ்டி, எஸ்சிசி மாணவா்கள், அவரவா் பயிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழில்பயிற்சி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளின் காப்பாளரிடமிருந்து விடுதி சோ்க்கை விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பத்தில் பள்ளித் தலைமையாசிரியா் அல்லது கல்லூரி முதல்வரின் சான்றொப்பம் மற்றும் உரிய ஆவணங்களுடன் பள்ளி மாணவா்கள், பிப்.18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவா்கள் பிப்.19-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.

முதல் மற்றும் 3-ம் வகுப்பு சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

மேலும் விவரங்களுக்கு, 044 2522 5657 என்ற எண்ணை அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews