'கணினி அறிவியல் பாடத்தை ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும் என, கணினி பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிப்.,28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - தருமபுரி
தமிழக இடைக்கால பட்ஜெட்டில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழக பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச்செயலர் குமரேசன் விடுத்த அறிக்கை: தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாட திட்டத்தில், 2011ம் ஆண்டே, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. தனியாக புத்தகமும் தயாரிக்கப்பட்டது. ஆனால், அதை பள்ளி கல்வித்துறை செயல்படுத்தவில்லை.
பிப்.,28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - நாமக்கல்
நம் பாட திட்டத்தை, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் பின்பற்றி, அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்துள்ளன. எனவே, தமிழகத்திலும், ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். இதனால், ஆயிரக்கணக்கான கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.