பாரபட்சமின்றி பணிவரன்முறை கவுரவ விரிவுரையாளர் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 17, 2021

Comments:0

பாரபட்சமின்றி பணிவரன்முறை கவுரவ விரிவுரையாளர் வலியுறுத்தல்

அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி பணிவரன்முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் சம்பளம், PF தொகையில் மாற்றம் – புதிய ஊதிய கொள்கை விரைவில் அமல்!

தமிழகத்தில் பல்கலைகளின் கீழ் செயல்பட்ட 41 உறுப்பு கல்லுாரிகளில் முதற்கட்டமாக 14, இரண்டாம் கட்டமாக 27 கல்லுாரிகள் அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டன. அவை மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்படும் வரை சம்மந்தப்பட்ட பல்கலையே மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் அவர்களை பணிவரன்முறை செய்ய சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் சென்னையில் விரைவில் நடக்கவுள்ளது. இதில் மதுரை மண்டலத்தில் அருப்புக்கோட்டை, திருமங்கலம், சாத்தூர், வேடசந்தூர் உட்பட 27 கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள் அழைக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட் – பிப்ரவரி 23ம் தேதி தாக்கல்!

அவர்கள் கூறுகையில் ''ஒரே கல்வித் தகுதி இருந்தும் இரண்டாம் கட்டமாக அரசு கல்லுாரி களாக மாற்றப்பட்ட 27 கல்லுாரிகளில் பணியாற்றுவோரை நேர்காணலுக்கு அழைக்கவில்லை. எங்களையும் அழைக்க வேண்டும்'' என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews