Breaking

Wednesday, February 24, 2021

'அரசு ஊழியர்களின் கோரிக்கை: தி.மு.க., ஆட்சியில் நிறைவேறும்'

'அரசு ஊழியர்களின் கோரிக்கை, விரைவில் அமைய உள்ள, தி.மு.க., ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடுதல் சார்பான அறிவிப்பு - உறுதிமொழி இணைப்பு
அவரது அறிக்கை:
இரட்டை வேடம் போடும், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க., அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஒருபுறம் நாடகமாடுகிறது. மற்றொரு புறம் உரிமைக்காகப் போராடுவோரை கைது செய்து, கொடுமைப்படுத்தும் படலம் அரங்கேறுகிறது. காத்திருப்பு போராட்டம்
கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள், தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
தேர்தலில் பணியாற்ற உள்ள கல்வித்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பிறந்த தேதி சேகரிப்பு:- அதிகாரிகள் தகவல்
அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்துக்குரியது. உரிமை போராட்டம் நடத்துவோருக்கு அன்பான ஒரு வேண்டுகோள். செவிமெடுக்காத, அ.தி.மு.க., அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒத்தி வையுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் அமைய உள்ள, தி.மு.க., ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog