தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 26, 2021

Comments:0

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு.!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால் அம்மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
3 days training for BT teachers - Proceedings - 3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா உச்சத்தில் இருந்த 2020-ல் சட்டப்பேரவை தேர்தலைத் நடத்தியுள்ளோம். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
ஆசிரியர் பணி வயது வரம்பு 40 அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு!
கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்னைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமுகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் தெரிவித்தார். தேர்தல் பணி ஈடுபடும் ஊழியர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தலைவணங்குகிறோம். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட 57 % வாக்குகள் பதிவாகின. பீகாரில் பெருமளவு பெண்கள் வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews