Breaking

Thursday, February 25, 2021

சிவில் சர்வீசஸ் தேர்வு மறுவாய்ப்பு மறுப்பு

ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் கடைசி வாய்ப்பை பயன்படுத்தியோருக்கு மறுவாய்ப்பு அளிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதுவதற்கு, சில வரம்புகள் உள்ளன. பொதுப் பிரிவினர், 32 வயது வரை, ஆறு முறை தேர்வு எழுத வாய்ப்பு தரப்படுகிறது. ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர், 35 வயது வரை, ஒன்பது முறை தேர்வு எழுதலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 37 வயது வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், கடந்தாண்டுக்கான தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
திறந்தநிலை பல்கலையில் பி.எட்., படிப்பு
ஆனால், அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.இந்நிலையில், 'வைரஸ் பரவல் இருந்ததால், தேர்வுக்கு சரியாக தயாராக முடியவில்லை. அதனால், தேர்வு எழுத கடைசி வாய்ப்பு முடிந்தவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை, 2021 தேர்வில் அளிக்க வேண்டும்' என, சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.'ஒரு முறை வாய்ப்பாக, தேர்வு எழுதுவதற்கான வயது உச்ச வரம்பை, ஒரு ஆண்டு உயர்த்த முடியுமா' என, விசாரணையின் போது, அமர்வு கேள்வி எழுப்பியிருந்தது. 'கொள்கை அளவில், எந்த சலுகையும் அளிக்க இயலாது' என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.
சென்னை பல்கலை 'அட்மிஷன்' அறிவிப்பு'
உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை தாண்டாத, அதே நேரத்தில் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை பயன்படுத்தியோருக்கு மட்டும், ஒரு வாய்ப்பு அளிக்க, மத்திய அரசு முன் வந்தது.இந்த நிலையில், 'எந்தப் பிரிவினருக்கும், தேர்வு எழுத மறுவாய்ப்பு அளிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog