தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 27.09 2019 அன்று தொகுதி 2 மற்றும் 22 ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது ) இரண்டு தொகுதி தேர்வுகளுக்கும் முதனிலைத்தேர்வும் , முதன்மை எழுத்துத்தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது .
மிக முக்கியமாக தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழி அறிவுத்திறன் , கோப்புகள் வரைவுத் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்வாணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன அதனடிப்படையிலேயே , ஆழ்ந்து விவாதித்து மேற்படி தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது . மேற்படி பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன பல்வேறு துறைத் தலைவர்கள் , தமிழ் பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி , தற்கால அரசுத்துறைகளின் தேவைகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டன மேற்படி பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர் இருப்பினும் ஒரு சிலர் சில மாற்றங்கள் தேவை என கோரிக்கை விடுத்திருந்தனர் . அவர்களது கோரிக்கையினப் பரிசீலித்த தேர்வாணையம் , தொகுதி 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தில் கீழ்கண்ட மாற்றங்களைச் செய்துள்ளது .
முதனிலைத்தேர்வு ( Preliminary Examination ) முதனிலைத்தேர்வுக்கு ( Preliminary ) ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது இருப்பினும் தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் , தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் -VIII , IX ( Units - VIII , IX ) க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் . தேர்வர்களின் தகவலுக்காகவும் , அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் முதனிலைத்தேர்வுக்கான ( Prellminary Examination ) மாதிரி வினாத்தாள் இம்மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் . இத்தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும் .
Search This Blog
Thursday, January 21, 2021
Comments:0
TNPSC Group 2 - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.