விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்’ – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 13, 2021

Comments:0

விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்’ – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

தமிழகத்தில் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், விருப்பம் உள்ளமாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்வி நிறுவனங்களை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்குமாறு பரிந்துரை செய்த காரணத்தால், வரும் ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறந்து வகுப்புகளை தொடங்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். இன்று கோபிச்செட்டிபாளையத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் படி, முதல்வர் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளிகள் செயல்பட தொடங்கும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு எந்தெந்த பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்து அட்டவணை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம். தற்போது 98% மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளனர். தனியார் பள்ளிகளில் கட்டாயமாக கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தற்போது முதற்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 6029 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக பிற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். மாணவர்கள் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews