அயல் பணிக்கு சென்ற அரசு ஊழியர்ககளுக்கு அதே இடத்தில் பணி: பரிசீலிக்கிறது அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 12, 2021

Comments:0

அயல் பணிக்கு சென்ற அரசு ஊழியர்ககளுக்கு அதே இடத்தில் பணி: பரிசீலிக்கிறது அரசு

தமிழகத்தில், ஒரு துறையில் இருந்து, மற்றொரு துறைக்கு, அயல் பணியாக சென்றவர்களை, அதே துறையில் பணியமர்த்துவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில், 60க்கும் மேற்பட்ட, அரசு துறைகள் உள்ளன. ஒரு துறையில் பணிபுரிவோர், அதே துறையில், வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம். சில நேரங்களில், ஒரு துறை பணியாளர்களை, வேறு துறைக்கு, அயல் பணியாக அனுப்புவது வழக்கம்.குறிப்பாக அமைச்சர்கள், வேறு துறையில் பணியாற்றும், தங்கள் உறவினர்கள் மற்றும் வேண்டப் பட்டவர்களை, தங்கள் துறைக்கு, அயல் பணியாக அழைத்து கொள்வர்.வேறு துறையிலிருந்து வந்தவர்கள், அமைச்சர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதால், அமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் கோலோச்சுவர். அந்த துறை அலுவலர்கள் அனைவரையும், ஆட்டி படைப்பர். அதேபோல, வாரியம் போன்றவற்றுக்கும், சிலர் அயல் பணியாக செல்வர்.இவ்வாறு அயல் பணியாக சென்றவர்கள், அந்த துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். எனவே, அவர்களை, அதே துறையில் பணியமர்த்துவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு அமைச்சர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். தம்மால் மீண்டும் அமைச்சராக முடியாவிட்டாலும்; அமைச்சராகி, அதே துறை கிடைக்கவிட்டாலும், தனக்கு வேண்டிய நபர் அங்கு இருந்தால், அந்த துறை தொடர்பான தகவல்களை, அவர் வழியாக அறிந்து கொள்ள முடியும்; தேவையான உதவிகளை செய்வார் என, அமைச்சர்கள் நம்புகின்றனர். எனவே, இது தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடம் மாறாத ஊழியர்கள்தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், துறை செயலர்கள், இயக்குனர்கள் போன்றோர், இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்களின் நேர்முக உதவியாளர்களாக பணியாற்றுவோர், அதே இடத்தில் பணியாற்றுகின்றனர்.செயலர்கள் யார் வந்தாலும், துறையில் இவர்கள் வைப்பதே சட்டமாக உள்ளது.செயலர்களிடம் எதையாவது தவறாக சொல்லி, பிரச்னை ஏற்படுத்திவிடுவர் எனக்கருதி, துறை ஊழியர்கள் அனைவரும், இவர்கள் பேச்சுக்கு கட்டுப்படுகின்றனர். அவர்களுக்கு இடமாற்றம் இல்லாததால், பல துறை செயலர்களின் உதவியாளர்கள் ஆட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் சந்திக்க வந்தால், அனுமதி அளிப்பதில்லை. அனைவரையும் மரியாதை குறைவாக பேசுகின்றனர்.எனவே, துறை செயலர்களை இடமாற்றம் செய்வது போல, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல், நேர்முக உதவியாளர்களாக பணிபுரிவோரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என, துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், ஒரு துறையில் இருந்து, மற்றொரு துறைக்கு, அயல் பணியாக சென்றவர்களை, அதே துறையில் பணியமர்த்துவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில், 60க்கும் மேற்பட்ட, அரசு துறைகள் உள்ளன. ஒரு துறையில் பணிபுரிவோர், அதே துறையில், வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம். சில நேரங்களில், ஒரு துறை பணியாளர்களை, வேறு துறைக்கு, அயல் பணியாக அனுப்புவது வழக்கம்.குறிப்பாக அமைச்சர்கள், வேறு துறையில் பணியாற்றும், தங்கள் உறவினர்கள் மற்றும் வேண்டப் பட்டவர்களை, தங்கள் துறைக்கு, அயல் பணியாக அழைத்து கொள்வர்.வேறு துறையிலிருந்து வந்தவர்கள், அமைச்சர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதால், அமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் கோலோச்சுவர். அந்த துறை அலுவலர்கள் அனைவரையும், ஆட்டி படைப்பர். அதேபோல, வாரியம் போன்றவற்றுக்கும், சிலர் அயல் பணியாக செல்வர்.இவ்வாறு அயல் பணியாக சென்றவர்கள், அந்த துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். எனவே, அவர்களை, அதே துறையில் பணியமர்த்துவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு அமைச்சர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். தம்மால் மீண்டும் அமைச்சராக முடியாவிட்டாலும்; அமைச்சராகி, அதே துறை கிடைக்கவிட்டாலும், தனக்கு வேண்டிய நபர் அங்கு இருந்தால், அந்த துறை தொடர்பான தகவல்களை, அவர் வழியாக அறிந்து கொள்ள முடியும்; தேவையான உதவிகளை செய்வார் என, அமைச்சர்கள் நம்புகின்றனர். எனவே, இது தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடம் மாறாத ஊழியர்கள்தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், துறை செயலர்கள், இயக்குனர்கள் போன்றோர், இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்களின் நேர்முக உதவியாளர்களாக பணியாற்றுவோர், அதே இடத்தில் பணியாற்றுகின்றனர்.செயலர்கள் யார் வந்தாலும், துறையில் இவர்கள் வைப்பதே சட்டமாக உள்ளது.செயலர்களிடம் எதையாவது தவறாக சொல்லி, பிரச்னை ஏற்படுத்திவிடுவர் எனக்கருதி, துறை ஊழியர்கள் அனைவரும், இவர்கள் பேச்சுக்கு கட்டுப்படுகின்றனர். அவர்களுக்கு இடமாற்றம் இல்லாததால், பல துறை செயலர்களின் உதவியாளர்கள் ஆட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் சந்திக்க வந்தால், அனுமதி அளிப்பதில்லை. அனைவரையும் மரியாதை குறைவாக பேசுகின்றனர்.எனவே, துறை செயலர்களை இடமாற்றம் செய்வது போல, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல், நேர்முக உதவியாளர்களாக பணிபுரிவோரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என, துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews