முதுகுத் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திறனாளி களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பெற ஜன .5 - ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி : தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , முதுகு தண்டு வடத் தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக பிரத் யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க ஆணை வழங்கியுள்ளது .
கால்களில் முழுமையாக வலு இல்லாத முதுகு தண்டு வடம் ( கழுத்து முதுகு , இடுப்பு ) பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம் . சென்னை , தேனாம்பேட்டைடிஎம்எஸ் வளாகம் , வனத்துறை அலு வலக தரைத்தளத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ ஜன .5 - ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.