தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கடந்த 19-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்களை முடிக்க தமிழக அரசு சனிக்கிழமைகளும் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டிருந்தது. இதன்படி நாளையும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சனிக்கிழமைகளும் பள்ளிகள் நடைபெறும்:
தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா காரணமாக மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறக்க ஏற்ற சூழல் அமையாத காரணத்தால் பள்ளிகள் திறக்க தமிழக அரசு அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் கடந்த 19-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இந்நிலையில் 10 மாதங்களாக வகுப்புகள் சரியாக நடத்தப்படாததால், பாடங்களை விரைவில் நடத்தி முடிக்கும் நோக்கத்தில் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நாளை சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் வழக்கம் போல் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Friday, January 22, 2021
தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் – சுற்றறிக்கை வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.