பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அதிகாரிகளிடம் இருந்து வராத காரணத்தால் ஆசிரியர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
பொதுத்தேர்வு பாடத்திட்டம்:
கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 19 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, 40% வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பான விபரங்கள் வெளியான நிலையில், குறைக்கப்பட பாடத்திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிலை என கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் தங்களது வாட்ஸ்ஆப் மூலமாகவும், வாய்மொழி உத்தரவாகவும் தான் குறைக்கப்பட பாடத்திட்ட விபரங்கள் கிடைக்கப் பெற்றதாக கூறி உள்ளனர். இருப்பினும் பாடத்திட்டத்தில் சில பக்கங்கள் மட்டுமே நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், பாடத்திட்டம் குறைப்பு குறித்து அமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட போதிலும், அதிகாரபூர்வ தகவல்கள் இல்லாத காரணத்தால் வாட்ஸ்ஆப் மூலம் பெறப்பட்ட விபரங்களை வைத்தே மாணவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம்.
இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள குழப்பத்தை நீக்க பள்ளிக்கல்வித்துறை விரைந்து குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
Search This Blog
Friday, January 22, 2021
Comments:0
Home
Syllabus
TEACHERS
10, 12ம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை – ஆசிரியர்கள் குழப்பம்
10, 12ம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை – ஆசிரியர்கள் குழப்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.