Breaking

Tuesday, January 19, 2021

'நீட்' விடைத்தாள் மறு மதிப்பீடு தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவு

'நீட்' தேர்வு விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய கோரிய வழக்கில், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், அணைக்கட்டைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி தாக்கல் செய்த மனு:நீட் தேர்வில், மாதிரி விடைத்தாளில், 720 மதிப்பெண்களுக்கு, 520 மதிப்பெண்கள் சரியாக இருந்தது. ஆனால், தேர்வு முடிவுகளில், நான், 19 மதிப்பெண் மட்டுமே எடுத்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த முடிவு, எனக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. என் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய கோரி, தேசிய தேர்வு முகமைக்கு, மனு அளித்தேன். ஆனால், என் மனு தொடர்பாக, எந்த முடிவும் அறிவிக்கவில்லை. என், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், விடைத்தாளில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க, தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்., 9க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog