2020-2021 Media and community mobilization செயல்பாட்டில் கல்வி/சுகாதாரம்/ பாதுகாப்பு குறித்த சுவர் சித்திரப் போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு - செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 23, 2021

Comments:0

2020-2021 Media and community mobilization செயல்பாட்டில் கல்வி/சுகாதாரம்/ பாதுகாப்பு குறித்த சுவர் சித்திரப் போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு - செயல்முறைகள்

சென்னை மாவட்டம், ஒருங்கிணைந்த கல்வி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
முன்னிலை.
முனைவர்.
ஆ அனிதா
செ.மு.அ.எண். /M&C /ஓபக/2021
நாள் : .01.2021
பொருள் : ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி- சென்னை மாவட்டம்
2020-2021 - Media and community mobilization செயல்பாட்டில் கல்வி/சுகாதாரம்/ பாதுகாப்பு குறித்த சுவர் சித்திரப் போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு.
பார்வை :
மாநிலத் திட்ட இயக்குநர்,
ஒருங்கிணைந்த கல்வி, சென்னை -06, அவர்களின் ந.க.எண்.472/C7/M&C/SS/2020
நாள். 18.01.2021
பார்வையில் காணும் கடிதத்திற்கிணங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் Media & Community Mobilization என்ற தலைப்பில் சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு அனைத்து மண்டலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கல்வியாண்டில் Covid -19 ன் பெருந்தொற்றுக் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள மனரீதியான அச்சத்தினைப் போக்கி, தற்போதைய சூழலுக்கு ஏற்ப விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியமாகிறது.
திட்ட ஏற்பளிப்பு குழுவின் பரிந்துரையின்படி, நடப்பு நிதியாண்டில் பள்ளி மாணவர்களின் கல்வியை தொடர்வது தற்போது நிலவும் சூழ்நிலையில் ஒரு பெரிய சவாலாக உள்ளது. இணையம் மூலம் போதுமான அளவில் இணைக்கப்படாத பகுதிகளுக்கும், கணினிகள்/டேப்லெட்/கைப்பேசி வசதி இல்லாத மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த உள்ளடக்க நிகழ்வுகளைக் கொண்டு செல்ல வானொலி மற்றும் தொலைக்காட்சியை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வியில் Media & Community Mobilization என்ற திட்டக்கூறில் வழங்கப்பட்ட நிதியை தற்போதைய சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்துவதற்கு மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கல்வி தொலைக்காட்சிப் பரிவு வாயிலாகவும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடங்கள் தயாரிக்கப்பட்டு (Video contents) வாயிலாக ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அகில இந்திய வானொலி நிலையத்தின் வாயிலாக (Audio Lessons) ஒலிப்பரப்புவதற்கும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வியின் குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் சார்ந்தும் குறிப்பாக குழந்தைகளின் கல்வி உரிமை, பெண்கல்வி, பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தன் சுத்தம் சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களிடையே சுவர் சித்திரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சுவர் சித்திரங்கள் போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் / மாணவியர்களிடையே சுவர் சித்திரங்கள் வரைதல் போட்டிகள் பிப்ரவரி 2 ஆம் வாரத்திற்குள் நடத்தி பரிசுகள் (இணைப்பில் உள்ள தலைப்புகளின் படி) வழங்குவதற்கு அறிவுறுத்தப்படுகிறது.
கீழ்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளில் வண்ணச் சுவர் சித்திரங்கள் வரைதல் போட்டிகளை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. பள்ளி அளவில் மாணவர்களை (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வீட்டிலிருந்தபடியே ஓவியங்கள் வரையச் செய்து தபால் வாயிலாகவோ Whats App வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ பள்ளிக்கு அனுப்பச் செய்து அவற்றிலிருந்து சிறப்பாக வரைந்த 5 மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும்.
2. சுவர் சித்திரங்கள் வரைவதற்கு தேர்வு செய்யப்பட்ட 5 மாணவர்களை பெற்றோர்களே பள்ளிக்கு அழைத்துவந்து அவர்கள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்பதை ஊக்குவித்தல் வேண்டும்...
3. மாணவர்களை பள்ளிக்கு, பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்துடன் வரவழைத்தல் வேண்டும். பெறப்பட்ட ஒப்புதல் கடிதங்களை பள்ளியில் பராமரித்தல் வேண்டும்.
4. இதன்படி பள்ளி அளவில் சுவர் ஓவியம் வரைதல் போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த 3 ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு கீழ்கண்டவாறு பரிசுகள் வழங்குதல் வேண்டும்.
. முதல் பரிசு - ரூ. 600
• இரண்டாம் பரிசு - ரூ. 500
• மூன்றாம் பரிசு - ரூ. 400
• மொத்தம் ரூ. 1500
5. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை, காசோலையாக வழங்கப்படும்போது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடன், மாணவர்கள் நேரடியாக வங்கிகளுக்கு சென்று காசோலை மூலம் பணம் பெறும் முறையை அறிந்துக் கொள்கின்றனர். மேலும் அதுசார்ந்து விழிப்புணர்வும் அடைகிறார்கள். எனவே எந்தவொரு காரணத்தைக் கொண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்கப்படக் கூடாது.
6. பள்ளி அளவிலான போட்டிகளை நடத்திட ரூ.900 வரை செலவினம் மேற்கொள்ளலாம் ( சுவர் சித்திரங்கள் வரைவதற்கான பொருட்கள் - (எனாமல் அல்லது ஆயில் பெயிண்ட் (Enamel or Oil paint or Apex paint with strainer). மேற்படி பள்ளிகளின் சுவர்கள் மற்றும் சுற்றுச் சுவர்களில் போட்டிக்கான சுவர் சித்திரங்களை வரைய ஒரு படத்திற்கு 6 ச.அ வீதம் (3 x 2 அல்லது 2 x 3) மொத்தமாக 5 படங்களை 30 ச.அ யில் (அளவில்) வரைய ஒதுக்க அறிவுறுத்தப்படுகிறது. பள்ளிகள் அளவில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கல்வியில் ஆர்வமுள்ள உள்ளூர் பிரமுகர்கள் மூலமாக பரிசுகள் வழங்கப்பட வேண்டும். அப்போது Covid-19 தற்காப்பு நடமுறைகளை தவறாது பின்பற்றப்பட வேண்டும்.
பள்ளி அளவில் நடக்கும் போட்டிகளை முறையாக ஆவணப்படுத்துதல் மற்றும் புகைப்படங்கள் (Photo) ஒளிப்பதிவும் (video) செய்து செய்து மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு chennai_ssa@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புதல் வேண்டும். போட்டிகள் நடக்கும் பள்ளிகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் அப்போட்டிகளை நடத்தி முடிக்கும் வரை முறையாக கண்காணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி அளவிலான போட்டிகளில் கலந்துக் கொண்டு பரிசுகளை வென்ற மாணவர்களின் படைப்புகளில் அவர்களது பெயர் மற்றும் வகுப்பினை குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
சென்னை மாவட்டம் இணைப்பு
1. பள்ளிகளின் பெயர் பட்டியல்
2. போட்டிகளுக்கான தலைப்புகள் பெறுநர்
1. அனைத்து மண்டல மேற்பார்வையாளர்கள், சென்னை மாவட்டம். 2.அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் (மண்டலம் வழியாக) நகல்
1. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை -06,
அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
2. கல்வி அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை , அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது
3. உதவிக் கல்வி அலுவலர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை
4. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (மத்திய, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு)
5. அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், சென்னை மாவட்டம். போட்டிகளுக்கான சுவர் சித்திரங்களின் தலைப்புகள்
1. மழைநீர்! உயிர்நீர் !
மழைநீரைச் சேமிப்போம் நிலத்தடி நீரைப் பாதுகாப்போம்
2. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்!.
- 3. வளங்காப்போம் வளம் பெறுவோம்!
4. சுற்றுச்சூழல் கேடு சுகாதாரக் கேடு
5. மாசு தவிர்ப்போம், அவனியைக் காப்போம்!
6. நூலகம் செல்வோம்! நுண்ணறிவு பெறுவோம்!
7. அன்புக்கு ஆலயம், அறிவுக்கு நுாலகம்!
8. புத்தகம் படிப்போம், புதியதோர் உலகு செய்வோம்!
9. ஒழுக்கத்தைக் கற்றுத் தரும் பள்ளிக்கூடம் துாய்மையே நமக்கு என்றும் நல்ல பாடம்
10. படிக்கும் இடத்திலே குப்பைகளைப் போடாதே பாழான நோள்களைப் பரவிடவும் செய்யாதே 11. கழிவுகளைப் போட குப்பைக்கூடை வைத்திடு மாணவப் பருவத்திலே இம்முறையைப் பழகிடு
12. சுற்றுபுறத் துாய்மையை நீபேணிக் காத்திடு சுற்றுகிற பூமியிலே நூறாண்டு வாழ்ந்திடு
13. தெருவோரச் சாக்கடையில் நீர்தேக்கி வைக்காதே கொசுவாலே நோய்வந்தால் நம்மை விட்டுப் போகாதே
14. சாலையின் ஓரங்களில் மரங்களை வளர்த்திடு துாயநல் காற்றையே தினமும் உள்வாங்கிடு
15. அமுதமாய் தண்ணீ ரைக் காய்ச்சியே குடித்திடு வான்மழை சேமித்து மண்வளம் காத்திடு
16. நீர்வளம் காக்க நெகிழியைத் தவிர்த்து நீடுழி வாழ்ந்திட நிலத்தை நிமிர்த்து
17. பார்ப்பது எல்லாம் நம் கண்ணாலே குப்பையை எடுக்க வேண்டும் தன்னாலே
18. கைவிடுவோம் பாலிதீன் பையை
கையில் எடுப்போம் துணிப்பையை
19. துாய்மைக்குத் துணைநிற்போம் வாய்மைக்கு வழி வகுப்போம்
20. வகுப்பறையும் கருவறையும் ஒன்றாகுமே துாயநம் பள்ளியதற்குச் சான்றாகும் 21. நோயால் நமக்கு வரும் தகராறு தூய்மையாய் இருந்தால் நீயே வரலாறு
22. சமூக இடைவெளி கடைப்பிடிப்போம் கொரோனா நோய்க்கு விடை கொடுப்போம்
23. நன்றாய்க் கைகளைக் கழுவு ஒன்றாய் இருப்பதிலிருந்து நழுவு
24. பழைய உணவுமுறைக்கு மாறு தமிழர் பெருமைதனைக் கூறு
25. இஞ்சி மஞ்சள் சுக்கு இயற்கைக் கவசம் நமக்கு
26. கூட்டமதைத் தவிர்த்திடு கொரோனாவை விரட்டிடு
27. விட்டமின் Cயை சுவைப்போம் கோவிட் 19 யைத் தவிர்ப்போம்
28. இருமல் தும்மலா? துணி கொண்டு மூடு வந்தால் உடனே மருத்துவரை நாடு!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews