சேலத்தில் பணி நியமனம் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் முன் வெயிட்டேஜ் ஆசிரியர்கள் திரண்டு கோரிக்கை அட்டைகளை ஏந்தி காத்திருந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம் வந்துள்ளார். நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு காத்திருக்கும் வெயிட்டேஜ் ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள், கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடி காத்திருந்தனர். இந்த ஆசிரியர்களிடம் முதல்வரின் பாதுகாப்பு பிரிவு மற்றும் சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து 5 ஆசிரியர்களை மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனுவை ஆசிரியர்கள் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் (90-110) பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமனம் பெறும் வேளையில், தவறான வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்து நிற்கிறோம். பல ஆண்டுகளாக வேதனையில் தவிக்கும் எங்களுக்கு, கடந்த 2018ம் ஆண்டு வெயிட்டேஜ் முறையை அரசு ரத்து செய்தது மகிழ்ச்சியை தந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட எங்களுக்கு இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். அதனால், பணி நியமனம் வழங்கி வாழ்வை காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.