புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக, தஞ்சை தமிழ் பல்கலையில், 'மேடைத் தமிழ்' பயிற்சிப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மலேஷிய ஊடக நிறுவனத்தின் சார்பில், தமிழ்ப் பல்கலையில் செயல்பட்டு வரும், தமிழ் வளர் மையத்தின் ஒருங்கிணைப்பில், பள்ளி மாணவர்களுக்கும், பல்கலை மாணவர்களுக்கும் தனித்தனியே சர்வதேச போட்டிகள் நடைபெறுகின்றன.
இதன் துவக்க விழாவில், தமிழ் பல்கலை துணை வேந்தர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது: தாய்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பிள்ளைகளுக்கு, தமிழ் கல்வியை அளிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அதேநேரம், தலைமுறைகள் கடந்து, ஒரு மொழி வளர, அதை இளம் தலைமுறையினர் பேச வேண்டும். நல்ல மேடை தமிழ்ப் பேச்சு, பலருக்கும் அன்றாட வாழ்வில், மொழியை பயன்படுத்துவதற்கு உந்துதலாக அமையும்.
மேடைத் தமிழை ஆற்றலுடன் வெளிப்படுத்த, பல நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, மேடையில் பேசும் கலையை துவங்க முடிவு செய்துள்ளோம். இணையதளம் வாயிலாக, சிறந்த தமிழ் பேச்சாளர்களால் நடத்தப்படும் இப்படிப்புக்கு, சான்றிதழ்கள் வழங்கப் படும். தமிழர்கள் வாழும் நாடுகளில், தமிழ் வளர் மையத்தின் சார்பில், இதில் பங்கேற்கலாம். அதேபோல, நாட்டின் மற்ற மாநிலங்களிலும், இது செயல்படுத்தப்படும். இந்த பயிற்சியால், தமிழை வீட்டிலும், வெளியிலும் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.