Breaking

Wednesday, December 02, 2020

அசல் சான்றிதழ் பெற கல்லுாரிகளுக்கு தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பணி நியமனத்தின்போது, பேராசிரியர்களிடம் இருந்து, அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்கக் கூடாது' என, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. திருச்சியை சேர்ந்த தனியார் கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக், தமிழக உயர் கல்வி துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளுக்கு முரணாக, ஆசிரியர்களிடம், அசல் சான்றிதழ் வாங்கி வைக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து, உயர் கல்வி துறை முதன்மை செயலர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வி இயக்குனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.இந்த கடிதத்தின் அடிப்படையில், அண்ணா பல்கலையின் பதிவாளர் கருணாமூர்த்தி, அனைத்து தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் விபரம்:கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி, இணை பேராசிரியர்களிடம், அவர்களின் கல்வித் தகுதிக்கான அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ளக் கூடாது.பணி நியமனம் மேற்கொள்ளும்போது, அசல் சான்றிதழ்களை பெற்றால், அதை உடனே சரிபார்த்து, உரியவர்களிடம் திருப்பி தர வேண்டும். அசல் சான்றிதழ்களின் நகல்களை மட்டும் வைத்து கொள்ளலாம்.அதேபோல், பணி நியமனம் மற்றும் ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட நடவடிக்கைகளில், ஏ.ஐ. சி.டி.இ., விதிகளை, எந்த வகையிலும் மீறக் கூடாது.பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், யோகா போன்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog