Breaking

Friday, December 11, 2020

கால்நடை மருத்துவ கல்லுாரி ரூ.266 கோடியில் அடிக்கல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேனி மாவட்டத்தில், 266 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, முதல்வர் பழனிசாமி., 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தேனி மாவட்டம், வீரபாண்டி கிராமத்தில், 254 ஏக்கர் நிலப்பரப்பில், 266 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, அடிக்கல் நாட்டினார். இந்த கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள, கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை பூர்த்தி செய்யும். இக்கல்லுாரி, கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால், பால், இறைச்சி, கால்நடை உற்பத்தி பொருட்களை பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் போன்றவற்றுக்கு வாய்ப்பாக அமையும்.இக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நடப்பு கல்வியாண்டில், 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக கட்டடம், நவீன வகுப்பறைகளுடன் கூடிய, எட்டு கல்வித் தொகுதி கட்டடங்கள், விடுதிகள், உணவகம் போன்றவை கட்டப்பட உள்ளன. நவீன ஆய்வக வசதிகளுடன் கூடிய, பால் மற்றும் இறைச்சிகளை பதப்படுத்தும், தொழில்நுட்ப நிலையங்கள் உட்பட, 15 துறைகள், கால்நடை மருத்துவமனை வளாகம் ஆகியவை ஏற்படுத்தப் பட உள்ளன. அடிக்கல் நாட்டு விழா வில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog