அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள்ஒதுக்கீடு வழங்ககோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 08, 2020

Comments:0

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள்ஒதுக்கீடு வழங்ககோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழகம் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது. அதில், தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளாக தங்களுடைய கட்டுப்பாட்டில் 2,400 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு முன்னுரிமை தருவது பாரபட்சமானது. மேலும், அரசு பள்ளிகளுக்கான சலுகைகள், கொள்கைகள், பாடத்திட்டம் மற்றும் உதவிகள் அனைத்துமே அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் 7.5 சதவீத இடஒதுக்கீடையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் வழக்கு தொடர்பாக பதிலளிக்க அரசு சார்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews