இன்ஜி., மாணவர்களுக்கு தேர்வு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 29, 2020

Comments:0

இன்ஜி., மாணவர்களுக்கு தேர்வு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பகுதி நேர படிப்பில், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, முதல் செமஸ்டர் தேர்வு, மார்ச், 15ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, அக்டோபரில் நடந்தது. நவம்பரில் வகுப்புகள் துவங்கின; கொரோனா பரவலால், ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, பிப்., 24க்குள் முதல் செமஸ்டருக்கான பாடங்களை முடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இது தொடர்பாக, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இன்ஜினியரிங் முழு நேர படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, பிப்., 26ல் செய்முறை தேர்வுகள் துவங்கும். மார்ச், 8ல் இருந்து செமஸ்டர், 'தியரி' தேர்வுகள் நடக்கும்.பகுதி நேர படிப்பில் சேர்ந்த, பி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு, முதல் செமஸ்டருக்கான பாட வகுப்புகள், மார்ச், 3ல் முடியும். செய்முறை தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கும்; மார்ச், 15 முதல், தியரி தேர்வுகள் நடத்தப்படும். இதையடுத்து, முழு நேர மற்றும் பகுதி நேரம் என, இரண்டு பிரிவு மாணவர்களுக்கும், இரண்டாம் செமஸ்டர் பருவத்துக்கான வகுப்புகள், ஏப்., 5ல் துவங்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews