தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில் தொழில்நுட்பத் தகவல் மற்றும் ஆலோசனை வகுப்பு நடத்தப்பட உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் வாரத்தில் கீழ்க்கண்ட தலைப்புகளில் தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
அங்கக வேளாண்மை - புதன்கிழமை - நவ. 18
இதனை நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அனைத்துத் தரப்பினரும் நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நாளுக்கு 15 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
கரோனா – (கோவிட்-19) பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறை விதிகளைக் கடைப்பிடித்து தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-2225 0511, 044-2250 1960 என்ற தொலைபேசி எண்ணிற்குத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.
விதிமுறைகள்
1. கட்டாயம் முகக்கவசம் அணிதல்
2. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல்
3. அடிக்கடி கைகளைக் கழுவுதல்
கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு அணுகவும்
பேராசிரியர், தலைவர்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையம்,
முதல் தளம், சிப்பெட் எதிரில்,
கிண்டி, சென்னை – 600 032.
தொலைபேசி எண்கள் - 044-2225 0511 , 044-2250 1960'’.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.