தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 7 மாத காலமாக பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும்மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வந்தனர். இந்த சூழலில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் வருகிற 16ம் தேதி முதல் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டன.
இருப்பினும் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெற்றோர் பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது.இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு இன்று காலை அறிக்கை வாயிலாக கூறியுள்ளது. சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பு குறித்து -திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
“தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு; பள்ளிகள் திறப்புத் தேதி குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்!” - என்ற அறிவிப்பு இந்த அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது. எந்த முன்யோசனைகளும் இல்லாமல் அறிவிப்பதும், பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதும் எடப்பாடி அ.தி.மு.க. அரசின் வழக்கமாக ஆகிவிட்டது. கொரோனாவை விட அரசின் அறிவிப்புகளின் மூலமாக எழும் பீதிகள் தான் அச்சம் தருவதாக உள்ளது.
குழப்பவாதிகள் கையில் அரசு இருக்கிறது என்பதற்கு பள்ளித்திறப்பு உதாரணம் ஒன்றே போதும்! குழப்ப அறிவிப்புகளின் மூலமாக மக்களை மேலும் மேலும் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.