அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை : பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 12, 2020

Comments:0

அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை : பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து வாக்கிங் வித் தி காம்ரேட் புத்தகம் நீக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராயின் Walking With The Comrades புத்தகம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டது. ஆனால் இதற்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP எதிர்ப்பையடுத்து எம்.ஏ.ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் அருந்ததிராய் மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் பகுதிகளுக்கு சென்ற அனுபவம் குறித்து எழுதியிருந்தார்.இந்நிலையில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பல்கலை. குழுவின் முடிவுப்படி அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார். 4 வருடமாக இருந்த பாடம் நான்கே நாட்களில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அருந்ததிராயின் புத்தகத்திற்கு பதிலாக எழுத்தாளர் கிருஷ்ணனின் My Native Land என்ற புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கிங் வித் தி காம்ரேட் புத்தகம் நீக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை. சாளரத்தை மூடிவிட்டால் காற்றின் வீச்சு நிற்பதில்லை,' எனத் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews