Breaking

Thursday, November 12, 2020

வரும் 16-ம் தேதி பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான வாய்ப்பு குறைவு...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மழை மற்றும் பண்டிகை காலத்தில் பள்ளி கல்லூரிகளை திறப்பதால் நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வருகின்ற 16-ம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கும் திட்டத்தை தமிழக அரசு ஒத்திவைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனோ பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன இந்தநிலையில் வருகின்ற 16ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதே போல தமிழகம் முழுவதும் கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தற்போதைய நிலையில் கொரோனோ நோய் பரவல் அதிகரிக்கும் என்பதால் பள்ளி கல்லூரிகளை அரசு திறக்கக்கூடாது என கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டு 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. இதனை பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசிடம் அறிக்கையாக சமர்ப்பித்தது. இந்த நிலையில் வருகிற 16-ஆம் தேதி பள்ளி கல்லூரிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு தள்ளி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மழை மற்றும் பண்டிகை காலத்தில் பள்ளி கல்லூரிகளை திறப்பதால் நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல கல்லூரிகளை பொருத்தவரை ஏற்கனவே பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் விடுதி அறைகளில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப் பட வேண்டும் உள்ளிட்ட பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவை நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால் தற்போதைய நிலையில் கல்லூரிகளை திறப்பதற்கான வாய்ப்பில்லை என உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வரும் 16-ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு தள்ளிவைக்க உள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog