புதுச்சேரி நவோதயா பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்; டிச.15 கடைசித் தேதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 13, 2020

Comments:0

புதுச்சேரி நவோதயா பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்; டிச.15 கடைசித் தேதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 9-ம் வகுப்பில் சேர்வதற்கு வரும் டிச.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்துப் புதுச்சேரி ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: ''புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 9-ம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பள்ளிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவியர், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தற்போது 8-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்க வேண்டும். 01.05.2005 முதல் 30.04.2009-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். பட்டியலின மாணவர்களுக்கும் இது பொருந்தும். தகுதிவாய்ந்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை www.navodaya.gov.in என்ற இணையதளத்தில் www.nvsadmissionclassnine.in எனும் இணைய முகவரியில் டிச.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 0413- 2655133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்''. இவ்வாறு பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews