Breaking

Tuesday, November 10, 2020

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு: கலெக்டர் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவள்ளுர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் பொன்னையா வெளியிட்ட அறிக்கை: பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், பணிப்பார்வையாளர் இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிட விபரம், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை மாவட்டத்தின் www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) பிரிவுக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகம்(ஊரக வளர்ச்சி), பிரிவு, திருவள்ளுர் - 602001 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது 8.12.2020 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog