Breaking

Monday, November 30, 2020

எம்.பி.பி.எஸ்.: இன்று முதல் மீண்டும் கலந்தாய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (நவ.30) முதல் மீண்டும் தொடங்குகிறது. அதன்படி பொதுக் கலந்தாய்வில் தரவரிசை எண் 362 முதல் 610 வரை உள்ளவா்களுக்கு முதல்நாளில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். கலந்தாய்வு கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. முதலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கும், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதையடுத்து பொதுக் கலந்தாய்வு கடந்த வாரம் திங்கள்கிழமை தொடங்கியது. ஒரு நாள் மட்டுமே கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் நிவா் புயல் பாதிப்பு காரணமாக கலந்தாய்வை ஒத்திவைப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்தது. கலந்தாய்வுக்கான புதிய தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, திங்கள்கிழமை (நவ. 30) முதல் டிசம்பா் 10 வரையில் கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. எந்தெந்த நாள்களில் எந்தெந்த தரவரிசையில் உள்ளவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்பது தொடா்பான விவரங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத் தோ்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog