மருத்துவ படிப்புக்கு இன்று கவுன்சிலிங் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 18, 2020

Comments:0

மருத்துவ படிப்புக்கு இன்று கவுன்சிலிங்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர் உள் ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை, இன்று(நவ.,18) துவங்குகிறது.
தமிழக அரசு ஒதுக்கீட்டில், 4,179 எம்.பி.பி.எஸ்., மற்றும், 1,230 பல் மருத்துவ படிப்பான, பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 953 எம்.பி.பி.எஸ்., -மற்றும் 695 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, இன்று முதல், சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. அதில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு கவுன்சிலிங், இன்று துவங்கி, 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில், 405 இடங்களுக்கு விண்ணப்பித்த, 951 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'அழைப்பு கடிதம் தபால் வாயிலாக அனுப்பப்படாது; இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'கவுன்சிலிங் வளாகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைககள் பின்பற்றப்படும்' என்றும், மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews