கல்லூரிகள் திறப்பு: 12ம் தேதி முடிவு: அமைச்சர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 10, 2020

Comments:0

கல்லூரிகள் திறப்பு: 12ம் தேதி முடிவு: அமைச்சர் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமி ழகத்தில் கல்லூரிகளை திறப்பது குறித்து 12ம் தேதி முடிவு செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை இப்போது திறக்க கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் என பல துறைகளை சார்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து 12 ஆயிரத்து 700 பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த நிலையில் திட்டமிட்டபடி வரும் 16ம் தேதி கல்லூரிகள் திறப்பது குறித்து 12ம் தேதி முடிவு எடுக்கப்படும் என உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews