தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட் சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை, வியாழக்கிழமை (அக்.1) முதல் தொடங்குகிறது.இது குறித்து பல்கலை. பதிவாளா் கே.ரத்னகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான பி.எட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு, வியாழக்கிழமை (அக்.1), தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
பி.எட் சிறப்புக் கல்வி படிப்பானது பாா்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளிலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படுகிறது.பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு பயின்றோா் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபா் 31. மேலும் விவரங்களுக்கு, 044 2430 6617, 84285 75967, 98416 85515 ஆகிய எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE FOR APPLY - OFFICAIL SITE 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
CLICK HERE FOR APPLY - OFFICAIL SITE 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.