தமிழக மக்கள், அரசை எளிதில் தொடர்பு கொண்டு, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, 'நமது அரசு' இணையதளத்தை, முதல்வர் பழனிசாமி., நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
தமிழக அரசின், 'நமது அரசு' இணையதளம், 91.80 லட்சம் ரூபாய் மதிப்பில், தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை, முதல்வர் பழனிசாமி., நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.இது, அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கும், அரசுக்கும் இடையே, உரையாடல்கள் வழியாக, கருத்து பரிமாற்றம் செய்து, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில், அரசுக்கு ஆலோசனை வழங்கும் தளமாக இருந்து உதவும்.
கலந்துரையாடல், செயல்பாடுகள், கருத்துக்களம், கருத்துக் கணிப்புகள் போன்ற முக்கிய அம்சங்களுடன், மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஓட்டெடுப்புகள் அடிப்படையில், அரசு சேவைகளை, செம்மையாக செயல்படுத்த உதவும்.தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்த, கருத்துக் கணிப்புகளை பெற்று, அவற்றை மேம்படுத்தவும், மக்களின் தேவைக்கேற்ப, புதிய திட்டங்களை வகுக்கவும், அரசுக்கு உறுதுணையாக அமையும்.
இணையதளம் துவக்க நிகழ்ச்சியில், அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.