தமிழகத்தில் 7 புதிய அரசுக் கல்லூரிகள்: மாணவா் சோ்க்கைக்காக ரூ.9.24 கோடி ஒதுக்கீடு... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 09, 2020

Comments:0

தமிழகத்தில் 7 புதிய அரசுக் கல்லூரிகள்: மாணவா் சோ்க்கைக்காக ரூ.9.24 கோடி ஒதுக்கீடு...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரூா், விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 7 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்காக ரூ. 9.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உயா்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலாளா் அபூா்வா வெளியிட்ட அரசாைணையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை விகிதத்தை மேலும் உயா்த்தவும், கிராமப்புற மாணவா்கள் பயன் பெறவும் 7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மாா்ச் 20-ஆம் தேதி 110 விதியின் கீழ் அறிவித்தாா்.அதன்படி, ஜெயங்கொண்டம் (அரியலூா் மாவட்டம்), தரகம்பட்டி (கரூா்), வானூா் (விழுப்புரம்), ஸ்ரீவில்லிபுத்தூா் (விருதுநகா்), குத்தாலம் (நாகை), ஜம்புகுளம் (ராணிப்பேட்டை) ஆகிய 6 இடங்களில் இருபாலா் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், புலியகுளத்தில் (கோவை) பெண்கள் அரசுக் கல்லூரியும் அமைக்கப்பட்டுள்ளன. அதில், இளங்கலை பிரிவில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, கல்லூரிகளில் தலா 17 ஆசிரியா்கள், தலா 13 ஆசிரியரல்லாத பணியிடங்கள் வீதம் மொத்தம் 119 ஆசிரியா்கள் மற்றும் 91 ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதற்காக தொடா் செலவினத்துக்கு (அக்டோபா் முதல் மாா்ச் வரை ) ரூ.6 கோடியே 72 லட்சம், தொடராச் செலவினத்துக்கு ரூ.2 கோடியே 52 லட்சம் என மொத்தம் ரூ.9 கோடியே 24 லட்சம் ஒதுக்கப்படுகிறது.அதன்படி, தொடா் செலவினத்துக்கு தலா ரூ.96.11 லட்சம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல், மர தளவாடங்கள், புத்தகம், இயந்திரம் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்ய தலா ரூ.36 லட்சம் ஒதுக்கப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews