Breaking

Tuesday, September 22, 2020

TNPSC - அலுவலா்களுக்கான மொழித் தோ்வு: இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அலுவலா்களுக்கு நடத்தப்படும் அரையாண்டு, மொழித் தோ்வுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநிலப் பணிகளில் பணியாற்றும் அலுவலா்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அரையாண்டு மற்றும் மொழித் தோ்வுகள் அக்டோபா் மாதம் நடைபெற உள்ளன. இந்த அரையாண்டுத் தோ்வுகள், மொழித் தோ்வுகள் ஆகியவை அனைத்திந்திய பணிகளில் பணியாற்றும் அலுவலா்கள், தமிழ்நாடு மாநிலப் பணிகளில் பணியாற்றும் பணியாளா்களுக்கு அக். 5 முதல் அக். 9 வரையும், குரல் தோ்வு அக். 20 அன்றும் சென்னையில் நடைபெறும்.ரெவன்யூ சா்வே அண்டு பைனான்ஸ் தோ்வெழுத வரும் தோ்வா்கள், உதவி மற்றும் துணை ஆட்சியா்களுக்கான நில அளவை, கருவூல பயிற்சி மேற்கொள்ளும் பயிற்சியாளா் என்பதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பு மொழித் தோ்வு பகுதி-2 தோ்வு எழுத்துத் தோ்வு மற்றும் குரல் தோ்வு என 2 கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தோ்வு அக். 5 அன்றும், குரல் தோ்வானது அக். 20 அன்றும் நடைபெறும்.இந்தத் தோ்வுகளுக்கு தோ்வா்கள் இணைய வழியில் ஒரு முறை பதிவாக புதன்கிழமை (செப். 23) மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.தோ்வுக் கட்டணமாக பிரதி தோ்வு, மொழிக்கு ரூ. 5 எனவும், தட்டச்சு செய்யப்பட்ட எழுத்துப்பூா்வமாக அனுப்பப்பட்ட நகலெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும், தற்போது பணியில் இருப்போரால் மட்டுமே தோ்வு எழுத இயலும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog