அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமாக தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட வாரியான கலந்தாய்வு நடைபெறும். கரோனா காரணமாக இம்முறை இணைய வழியில் நடைபெறுகிறது. இந்நிலையில் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஐடிஐ தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
23.09.2020, 24.09.2020 மற்றும் 25.09.2020 ஆகிய நாட்களில் பொது விண்ணப்பதாரர்களுக்குக் கலந்தாய்வு நடக்கவுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
http://www.skilltraining.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3 நாட்கள் அவகாசத்திற்குள் தங்கள் முன்னுரிமை வரிசைகளில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வுக்குப் பின் விண்ணப்பதாரர்களின் முன்னுரிமை மற்றும் விருப்பங்களுக்கேற்ப உறுதி செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் / தொழிற்பிரிவுகளுக்குத் தற்காலிகச் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாகச் சேர்க்கைக் கட்டணம் பெறப்பட்டு, சேர்க்கை உறுதி செய்யப்படும்.
இது தொடர்பாகச் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: http://nimiprojects.in/det-onlineadmission/
தொலைபேசி எண்கள்: 94990 55612, 94990 55618
இ-மெயில்: onlineitiadmission@gmail.com 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கூடுதல் விவரங்களுக்கு: http://nimiprojects.in/det-onlineadmission/
தொலைபேசி எண்கள்: 94990 55612, 94990 55618
இ-மெயில்: onlineitiadmission@gmail.com 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.