'ஆன்லைன்' தேர்விற்கு எதிராக வழக்கு அரசு செயலர்களுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 22, 2020

Comments:0

'ஆன்லைன்' தேர்விற்கு எதிராக வழக்கு அரசு செயலர்களுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜ் பல்கலை, 'ஆன்லைன்' தேர்வு முறைக்கு தடை கோரிய வழக்கில், 'இது இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது' எனக் கூறி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த முரளி தாக்கல் செய்த பொதுநல மனு: கொரோனா ஊரடங்கால், பல்வேறு கல்லுாரி, பல்கலைகளில், இறுதி பருவத் தேர்வை, 'ஆன்லைன் / ஆப்லைன்' முறையில் நடத்த, தமிழக அரசு அனுமதித்தது. இதை பின்பற்றி, இணைவிப்பு மற்றும் உறுப்புக் கல்லுாரிகளில், ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் உத்தரவிட்டார். மாணவர்களுக்கு வசதியான இடத்தில், பெற்றோர் மேற்பார்வையில் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு உத்தரவிட, பதிவாளருக்கு அதிகாரம் இல்லை. தேர்வு முறையில் மாற்றம் செய்ய, பல்கலை கல்விப் பேரவைக்கு தான் - அகாடமிக் கவுன்சில் - அதிகாரம் உள்ளது. தற்போது தேர்வு நடைபெறுகிறது. தேர்வை மேற்பார்வையிடுவதற்கான தகுதியை, பெற்றோர் பெற்றிருக்கவில்லை. ஆன்லைனில் தேர்வு எழுத, அனைத்து மாணவர்களுக்கும், 'ஸ்மார்ட் போன்', இணையதள வசதி இருக்க வாய்ப்பில்லை. இந்நடைமுறை, தேர்வு நடைமுறைக்கும், பல்கலையின் நன்மதிப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பதிவாளரின் உத்தரவுக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். முந்தைய தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது கல்விப் பேரவையின் ஒப்புதலுக்குப் பின், தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனு செய்தார்.
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவு: இவ்விவகாரம், வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது. பல்கலை மானியக்குழு செயலர், தமிழக தலைமைச் செயலர், உயர்கல்வித் துறை செயலர், மதுரை காமராஜ் பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, அக்., 15க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews