அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெறுவதால், மருத்துவப்படிப்பில் மிகக்குறைந்த அளவிலேயே சேருகின்றனர். இதனால் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு மருத்துவக்கல்வியில் உள் ஒதுக்கீடு வழங்க சட்டமசோதா நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு கவர்னர், ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும். அதன்பிறகே இது சட்டமாக மாறும். அதன்படி, ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் மாநில அரசு ஒதுக்கீடான 69 சதவீத இடஒதுக்கீட்டில், இந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கிடைக்கும்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற படிப்புகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களின்படி பார்க்கும்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுமேயானால், அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் 220 முதல் 230 வரையிலான இடங்களும், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 150 முதல் 160 வரையிலான இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுதவிர புதிதாக 11 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது. இதன்மூலம் வரும் ஆண்டுகளில் இந்த கல்லூரிகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்கும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.