மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை (MBC Rural Girls Incentive Scheme) வழங்குவதற்கான விதிமுறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 24, 2020

Comments:0

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை (MBC Rural Girls Incentive Scheme) வழங்குவதற்கான விதிமுறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை (MBC Rural Girls Incentive Scheme) வழங்குவதற்கான விதிமுறைகள்
நாள்: 23.09.2020
நேரம்: 4:00 மணி
கூட்ட விவாதப்பொருட்கள்
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் மட்டுமே தகுதிபெறும் பள்ளிகள். கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு மட்டும் பரிந்துரை செய்யப்பட வேண்டும். நகராட்சி / பேரூராட்சி / தேர்வு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகள் பயிலும் மாணவிகள் தகுதிபெறமாட்டார்கள்.
குடும்பத் தலைவர் ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்குள் இருத்தல் வேண்டும். 3-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை MBC மாணவிகள் மட்டுமே தகுதி பெறுவார்கள். (3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ. 500/- 6-ம் வகுப்பு ரூ.1000/-)
கேட்பு படிவத்தில் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் / ஊராட்சி மன்ற தலைவர் / கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பரிந்துரை செய்ய வேண்டும். - பள்ளி தலைமையாசிரியர்களிடம் இருந்து அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள் கேட்புகளை பெற்று தொகுத்து வட்டார கல்வி அலுவலர்கள் வாரியாக கேட்பு பட்டியலை தயாரித்து வழங்கவேண்டும். (ஒவ்வொரு கல்வி வட்டாரம் வாரியாக) கேட்பு படிவங்களை அக்டோபர் 2020ஆம் மாதத்திற்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இம்மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு /அரசு உதவி பெறும் கிராமப்புற பள்ளிகளில் பயிலும் அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர்கள் இத்திட்ட பயனை 100% முழுமையாக பயன்பெற வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews