தமிழக அரசின் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தில் சேர, 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், அரசின் சார்பில் இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இந்த திட்டத்தில் சேர, இந்த ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, செப்., 25ல் முடிந்தது. இதையடுத்து விண்ணப்பங்கள் பரிசீலனை நடந்து வருகிறது.
மாணவர் சேர்க்கை கேட்டு, 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு பள்ளி வாரியாக இடங்கள் ஒதுக்கப்படும். ஒரு இடத்துக்கு பல மாணவர்கள் போட்டி இருந்தால், குலுக்கல் முறையில், இடங்கள் நாளை தேர்வு செய்யப்படுகின்றன.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, வரும், 7ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, மெட்ரிக் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள், கல்வி கட்டணம் செலுத்த வேண்டாம். அவர்களுக்கான கட்டணத்தை, தனியார் பள்ளிகளுக்கு அரசே வழங்கும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.