50 – 55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியருக்கு எந்த நேரத்திலும் ஓய்வு வழங்க முடியும்: பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

50 – 55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியருக்கு எந்த நேரத்திலும் ஓய்வு வழங்க முடியும்: பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசு ஊழியர்கள் 50 – 55வயதைக் கடந்தாலோ அல்லது 30ஆண்டுகள் பணியை நிறைவு செய்தாலோ அவர்களுக்கு எந்தநேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS இதுதொடர்பாக கடந்த ஆண்டே மத்திய அரசு ஓர் அரசாணையை பிறப்பித்தது. ஆனால், அதில் இடம்பெற்ற சில அம்சங்களில் குழப்பம் உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அனைத்து குழப்பங்களுக்கும் விளக்கமளிக்கும் வகையில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 28-ல்ஒரு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள் ளது. அதில் கூறியிருப்பதாவது: 50 – 55 வயதைக் கடந்த அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பொதுநலன் கருதி பணி ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS அதேபோல, மேற்குறிப்பிட்ட வயது அல்லது பணி அனுபவம் கொண்டவர்கள் ஏற்கெனவே தகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பணியில் தொடரலாம் என சான்றுஅளிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கும் இந்த புதிய விதியில்இருந்து விலக்கு அளிக்கப்படமாட்டாது. அதாவது, அவர்களும் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் தகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். ஒருவேளை, அந்த ஆய்வில் அவரது தகுதி குறைந்திருந்தது தெரியவந்தால் அவர்களுக்கும் பணி ஓய்வு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews