தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நீட் தேர்விற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்குவதால், தேர்வர்கள் காலை 11 மணிக்கே தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும்.
வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே, தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
CLICK HERE TO READ MORE DETAILSஇயல்பை விட, கூடுதலாக வெப்பநிலை உள்ள மாணவர்களுக்கு தனி அறையில் தேர்வு நடைபெறும். தேர்வர்கள் சானிடைசர், குடிநீர் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். முகக் கவசம் மற்றும் கையுறைகள் தேர்வு மையத்தில் வழங்கப்படும்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க, ஆதார் எண், கைரேகை உள்ளிட்ட விவரங்கள் கட்டாயமாக சோதிக்கப்படும்.
நீட் தேர்வை நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட 78,058 பேர் கூடுதலாக எழுத உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 16,724 பேர் குறைவாக எழுத உள்ளனர்.