தமிழகத்தில் 4 அரசு பி.எட் கல்லூரிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சுமார் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தகுதித் தேர்வு மற்றும் தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லை. எனவே, இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேற்கண்ட ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு வாய்ப்பு இல்லை. இதனால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில் 71 பிஎட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் கடந்த வாரம் உத்தரவிட்டது. ஆனால் அரசு நிர்வாகத்துக்கு ஷாக் தரும் வகையில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் விதிமுறைகள் பின்பற்றாத 4 அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தடை விதித்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த ஆகஸ்ட் மாதம் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்ட முடிவுகளின்படி அங்கீகாரம் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நிலுவையில் வைத்துள்ள கல்லூரிகள் மற்றும் தகுதிகள் குறைவாக உள்ள கல்வியியல் கல்லூரிகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் சென்னை, புதுக்கோட்டை மற்றும் குமாரபாளையம் ஆகிய இடங்களில் உள்ள 4 பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்து தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினாவில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி போதிய ஆவணங்களை சமர்ப்பிக்காததாலும், குமாரபாளையத்தில் 16 ஆசிரியர்களுக்கு பதில் 9 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாலும், புதுக்கோட்டை கல்லூரியில் கல்லூரி ஆசிரியர் விதிப்படி நியமிக்கப்படாததாலும் இந்த 4 கல்லூரிகளில் வரும் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசின் தவறான கொள்கை மற்றும் தாமதமே காரணம் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
CLICK HERE TO READ MORE DETAILS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
CLICK HERE TO READ MORE DETAILS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.