12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் டி பார்ம், பி பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான கலந்தாய்வை வரும் வாரத்தில் நடத்த மருத்துவ கல்வி தேர்வு குழு திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பிறகே மருத்துவம் சார்ந்த பட்ட, பட்டய படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக, நீட் தேர்வு தாமதமாக தொடங்குவதால், அதற்குள்ளாக பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு, விண்ணப்ப படிவம் பெறும் முறை, விண்ணப்பம் திருப்பி செலுத்தும் தேதி, ஆகியவை ஆலோசனைக்கு பிறகு வெளியிடப்படும் என மருத்துவ தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.