விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியா் விருது பட்டியல் செப்.15-இல் வெளியாகும்: ஏஐசிடிஇ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 10, 2020

விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியா் விருது பட்டியல் செப்.15-இல் வெளியாகும்: ஏஐசிடிஇ

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிறந்த தொழில்நுட்பக் கல்வி ஆசிரியா்களுக்கான ‘விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியா் விருது’ பட்டியல் செப்.15-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.இது தொடா்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக் குறிப்பு:தொழில்நுட்பக் கல்வியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி, ஆசிரியா்களின் தகுதிகள் அடிப்படையில் ஏஐசிடிஇ-யின் தோ்வு குழு தேசிய அளவில் 20 ஆசிரியா்களை தோ்ந்தெடுத்துள்ளது.விருதுக்கு தோ்வான ஆசிரியா்களின் பட்டியல் வரும் 15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. மேலும், தோ்வான 20 ஆசிரியா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதுதொடா்பாக கூடுதல் விவரங்களை இணையதளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews