டெல்லி, கோவாவில் அடுத்த மாதம் வரை பள்ளிகள் திறப்பு இல்லை: மேகாலயாவில் செப்.21-ல் திறக்க முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 19, 2020

Comments:0

டெல்லி, கோவாவில் அடுத்த மாதம் வரை பள்ளிகள் திறப்பு இல்லை: மேகாலயாவில் செப்.21-ல் திறக்க முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அடுத்த மாதம் வரை டெல்லி, கோவாவில் பள்ளிகள் திறப்பு இல்லை என்றும், மேகாலயாவில் செப்.21-ல் பள்ளிகளைத் திறக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் புதிய கல்வி ஆண்டான ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக மார்ச் 16-ம் தேதி மூடப்பட்ட பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இப்போதுவரை திறக்கப்படவில்லை. மாற்று ஏற்பாடாக பெரும்பாலான அனைத்துப் பள்ளிகளும் தங்களின் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதற்கிடையே பொதுமுடக்கத் தளர்வுகளை அண்மையில் வெளியிட்ட மத்திய அரசு, செப்.21 முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என்று அறிவுறுத்தியது. இந்நிலையில் கோவா மாநிலத்தில் அக்.2-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மாணவர்கள் மற்றும் பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக பள்ளிகள் அக்.2 வரை திறக்கப்படாது. அக்.2-ம் தேதி அன்று மீண்டும் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்று பிரமோத் சாவந்த் தெரிவித்தார். அதேபோல டெல்லி பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''அக்.5-ம் தேதி வரையில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். அதேநேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போலத் தொடர வேண்டும். ஆனால், கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட, ஆசிரியர்களும் ஊழியர்களும் பள்ளிகளுக்கு அழைக்கப்படலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மேகாலயாவில் செப்.21-ம் தேதி முதல் படிப்படியாகப் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அம்மாநிலக் கல்வித் துறை அமைச்சர் லேக்மேன் ரேம்புய், ''9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் பாடங்கள் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை அணுகலாம். அதேநேரத்தில் வழக்கமான வகுப்புகளோ, வகுப்பறை நிகழ்வுகளோ நடைபெறாது'' என்று தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews