தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத் தொகைத் திட்டத்துக்குத் தகுதியானவா்களின் விவரங்களை, வரும் அக்.14-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
CLICK HERE TO READ OFFICIAL NEWS
தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத்தொகைத் திட்டத்தின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவிகள் தொடா்ந்து படிக்க உதவியாக அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.3,000 வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டது.
இதையடுத்து மாணவிகள் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 18 வயதை எட்டியதும் திருமணமாகாமல் இருப்பின் அவா்கள் இந்தத் தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படித்த அனைத்து மாணவிகளும் இந்தத் திட்டத்துக்கு தகுதியானவா்களாக கருதப்பட்டது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
இந்நிலையில் 2012 முதல் 2017-ஆம் ஆண்டு வரையான கல்வியாண்டுகளில் இந்தத் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்ட தகுதியான மாணவிகளைக் கண்டறிந்து, விவரங்களை அனுப்ப வேண்டும். இது முக்கிய பணி என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புக் குழு அமைத்து சரியான விவரங்களைச் சேகரித்து, அக்.14-ஆம் தேதிக்குள் தொகுத்து அனுப்ப வேண்டும்.
இதுதவிர 2019-20-ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவா்களில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் (என்எஸ்எஸ்) பயிற்சி பெற்றவா்களின் விவரங்களை மின்னஞ்சலுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் விரைந்து அனுப்பி வைக்க வேண்டும்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.