கிராம சபைக் கூட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 02.10.2020 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - விவரம் அனுப்புதல் - தொடர்பாக, - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 30, 2020

Comments:0

கிராம சபைக் கூட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 02.10.2020 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - விவரம் அனுப்புதல் - தொடர்பாக,

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ந.க.எண்.670/2020/ஊராட்சி .22, நாள்: 26.09.2020
அய்யா/அம்மையீர்,
பொருள்: | கிராம சபைக் கூட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 02.10.2020 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - விவரம் அனுப்புதல் – தொடர்பாக.

பார்வை:
1) அரசாணை (நிலை) எண்.245, ஊ.வ.(சி1) துறை, நாள் 19.11.1998.
2) அரசாணை (நிலை) எண்.130, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள் 25.9.2006.
3) இவ்வியக்கக கடித எண். ந.க.எண்.670/2020/ ஊராட்சி-2.2, நாள்: 21.09.2020
4) அரசு கடித எண்.12882/ஊராட்சி-2.2020 நாள்: 26.09.2020.

பார்வை 1-ல் காணும் அரசாணையில் உத்தரவிடப்பட்டதற்கிணங்க, 02.10.2020 காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதில், அனைத்து பிரிவு கிராம மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்த கூட்டப் பொருள்கள் (Agenda) விவாதிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பார்வை 4ல் காணும் அரசு கடிதத்தின்படி 02.10.2020 அன்று கிராமசபை நடத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி கிராம சபைக் கூட்டம் ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 02.10.2020 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், மக்கள் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், கொரானா பெருந்தொற்று காலத்தில் கிராம சபை கூடும் போது அரசு விதித்துள்ள COVID-19 தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்திட வேண்டும். மேலும் கீழ்கண்ட வழிமுறைகளையும் பின்பற்றிடத் தெரிவிக்கப்படுகிறது.

> கிராமசபைக் கூட்டவுள்ள பொது இடமானது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் (Containment Zone) இருப்பின் தொடர்புடைய ஊராட்சியின் கிராம சபையானது வேறொரு நாளில் மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியுடன் நடத்தலாம். கிராமசபைக் கூட்டத்தில் பொது மக்களை அழைத்திடும் போது, கொரானா தொற்று தொடர்பான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொடர்புடைய அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் அவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கிராம சபையில் மிகவும் வயதானவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாது. கொரனா காய்ச்சல் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் கிராம சபையில் கலந்து கொள்ளக் கூடாது.
> கிராம சபை பாதுகாப்பான பொது வெளியிலோ அல்லது காற்றோட்டமான கட்டிடத்திற்குள்ளாகவோ நடத்திட வேண்டும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ள பொது வெளியில் கூட்டத்திற்கு முன்னதாக முழுமையாக தூய்மை செய்து, கிருமிநாசினி பொருட்களை கொண்டு சுத்தம் செய்திட வேண்டும். - கிராம சபைக் கூட்டம் நடத்தவுள்ள பொதுவெளியில் கை சுத்தமாக்கும் கிருமிநாசினி (Hand Sanitizer) வசதி ஏற்படுத்திட வேண்டும்.
- கிராம சபை நடத்தவுள்ள இடத்தில் சோப்புடன் கூடிய கை கழுவும் வசதி ஏற்படுத்திட வேண்டும். - கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். - கிராமசபைக் கூட்டத்தினை துவங்குவதற்கு முன்பாக உடல் வெப்பநிலை அறியும் கருவி கொண்டு பரிசோதித்து பின் பொது மக்களை அனுமதிக்கலாம். - கிராமசபைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள பொது வெளியில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றிடும் பொருட்டு ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளியில் அமர வேண்டும்.
தேவையெனில் கோலப் பொடி கொண்டு மக்கள் அமர வேண்டிய இடத்தை வட்டமிட்டுக் காட்டலாம்.

- மாவட்ட ஆட்சித் தலைவர்களால் வெளியிடப்பட்ட கொரோனா தடுப்பு
நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும். - ஏதேனுமொரு ஊராட்சியில் கிராமசபை கூட்டுவதில் கொரானா தொற்று காரணமாக சிரமங்கள் ஏற்படின் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி வேறொரு நாளில் நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கலாம். பார்வை-2ல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
பார்வை-1ல் கண்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள பொருள்களுடன் 02.10.2020 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருள் விபரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
மேலும், 02.10.2020 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு 10.10.2020 க்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு: கிராம சபைக் கூட்டப் பொருள்கள்.
நகல்
1. அரசு கூடுதல் தலைமை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை -9.
2. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை -35.
3. திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, அனைத்து மாவட்டங்கள்.
4. உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), அனைத்து மாவட்டங்கள். CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews